சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்தநாளான 11.11.2020 அன்று தேசிய கல்வி தினமாக 2008-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழியின் சார்பாக தேசிய கல்வி தின கருத்தரங்கம் இணையதளம் வாயிலாக சிறப்பாக நடைபெற்றது. விழியின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா தலைமையுரையாற்றினார். விழியின் துணைச்செயலாளர் புதுமடம் ஹலீம் வரவேற்புரையாற்றினார்.
இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களாக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியை சாந்த்நி பீ அவர்களும், அரசியல் செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமுமு-மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினார்.
அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் பன்முகத்தன்மை, ஆற்றல், மத,இன பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான சேவை, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம், மாநிலங்களின் சுயஅதிகாரம் குறித்த பார்வை என பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பலரும் அறிந்திராத அறிவார்ந்த பல கருத்துக்கள், அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக கருத்தரங்கம் அமைந்திருந்தது.
இறுதியில், விழியின் பொருளாளர் பேரா.அபுல் ஃபாசல் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
Comments
Post a Comment