சிறப்பாக நடைபெற்ற அமீரக வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 அமீரகத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள்? என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக 25.04.2021 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானார் பங்குபெற்று பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக விழி அமைப்பின் பொருளாளர் பேரா.அபுல் ஃபாசல் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநில துணைச்செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் விழி அமைப்பின் செயல்பாடுகளை விளக்கினார். அமீரக தமுமுக-வின் தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் நிகழச்சியின் அவசியத்தை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சகோதரர் ஷேக் முஹம்மது சுலைமான் அவர்கள் கலந்துகொண்டு அமீரகத்தில் வேலைவாய்ப்பு, கொரானா காலத்தில் உள்ள சூழ்நிலை, விசிட் விசாவில் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், உடனடியாக வேலை பெறுவதற்கான நுட்பங்கள் ஆகியவற்றை விளக்கி பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு இறுதியில் பதிலளித்தார்.

விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமுமுக ஊடக அணி மாநில செயலாளர் அல்தாப், மாநில துணைச்செயலாளர் புதுமடம் ஹலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது என பங்கேற்பாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். 

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

பங்குபெற்றவர்களின் சிலரது கருத்துக்கள்:


Ravi Raju : Nice program, many thanks


Shafeeq Rahuman : Alhamdulillah… really a very useful program…br.sulaiman’s explanations are good… jazakumullah Khair


Jc. HGF. P. Ramesh : Nice Program. very Useful information


Sayeed # : very nice and useful program, may Allah bless all organizing team members.

Galaxy J7 : very useful meeting. Thank you so much for all the valuable info

Mohamed Aasik : இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் புரிவானாக

Safiullah : Nice programme for Job hunters especially UAE.Thanks.

Mackie Faisal : மிகவும் அருமையான முறையில் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்











Comments