அதிகரித்து வரும் விவாகரத்துகளை கட்டுப்படுத்தும் பொருட்டும், திருமண வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கான முன்னெடுப்புகளை செய்வதற்காகவும் திருமணத்திற்கு முன்பான கவுன்சலிங் என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதைப் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பிரஸ்டன் கல்லூரியில் 30.07.2019 அன்று நடைபெற்றது.
MMAC அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தமுமுக-வின் மனித வள மேம்பாட்டுப் பிரிவான விழி அமைப்பின் சார்பில், அதன் மாநிலச் செயலாளரும் உளவியல் சிகிச்சையாளருமான முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Comments
Post a Comment