ECI பள்ளியில் குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம்

 சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ECI மெட்ரிகுலேசன் பள்ளியில் 11.07.2019 அன்று நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பயிற்சி முகாமில் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியை தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழியின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Comments